ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

Photo Gallery

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தோடு கூடிய புண்ணிய காலம் மாசி மகம் ஆகும். ஈசனுடன் ஏற்பட்ட ஊடல் காரணமாக பார்வதி தேவி பூமியில் பிறக்கும்படி நேர்ந்தது. காளிந்தி நதியில் இருந்த தாமரைப் பூ ஒன்றில் வலம்புரிச் சங்கு வடிவமாய் இருந்தாள் அம்பிகை. 

அப்போது தக்கன் தன் மனைவி வேதவல்லியோடு அங்கு நீராட வந்தான். அவனது பார்வையில் வலம்புரிச் சங்கு பட்டது. அதனை எடுத்தபோது, அது அழகிய பெண் குழந்தையாயிற்று. இறைவியே குழந்தையாய் வந்த இத்தினம் மாசி மகம் ஆகும். ஆதி காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கொடியவனாக இருந்தான். 

நாட்டு மக்கள் அவனால் மிகவும் துன்பங்களை அனுபவித்து வந்தனர். இதனை நாட்டின் குருவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அரசனை வெல்லும் பொருட்டு, அதற்கான உபாயத்தை கூறும் படி, ஒரு இரவு நேரத்தில் வருண தேவனிடத்தில் சென்றார், அந்த நாட்டின் குருவானவர். 

கானகத்தில் இருந்த வருணன் வருவது பகைவன் என்று எண்ணி, தனது பாசத்தை அவர் மீது வீசினான். உடனே குரு இறந்து போனார். அந்தக் கொலை பாவத்தால் பிசாசு வடிவம் ஒன்று அங்கு தோன்றியது. அது வருணனை இரண்டு கால்களோடு கைகளையும், கழுத்தோடு கூடும்படி கட்டி சமுத்திரத்தினுள் வீசி விட்டது. 

வருணன் அங்கே நெடுங்காலமாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டு விடுவிப்பார் இன்றி கட்டுண்டு கிடந்தான். வருணன் இல்லாத காரணத்தால் மண்ணுலகில் மழை வளம் இல்லாமல் மக்கள் பஞ்சத்தில் தவித்து வந்தனர். இதனால் விண்ணவர்களும், மண்ணுலகத்தினரும் சேர்ந்து சிவபெருமானை நோக்கி மனமுருக வேண்டித் துதித்தனர்.

அவர்கள் வேதனையை உணர்ந்து கொண்ட ஈசன், பல காலமாக சமுத்திரத்தில் கட்டுண்டு கிடக்கும் வருணனின் கட்டுக்களை அறுத்தெரிந்து அவனை விடுவித்தார். வருணன் எழுந்து சிவபெருமானை வணங்கி நின்றான். பின்னர் ஈசனிடம் வேண்டுகோள் ஒன்றையும் வைத்தான். 

‘ஐயனே! மாசி மகமாகிய இத்தினத்தில், நான் கட்டுண்டு துன்பப்பட்டு கிடந்த இந்தத் தலத்தில் இந்தத் துறையில் நீராடி இறைவனை வேண்டுபவர்களுக்கு பாசத்தை நீக்கி அவர்களுக்கு முக்தியைக் கொடுக்க வேண்டும். அன்றைய தினத்தில் ஐயனே! 

தாங்கள் இந்தத் துறையில் எழுந்தருளல் வேண்டும்’ என்று வேண்டி பிரார்த்தித்து வரங்களைப் பெற்றான். இந்தச் சரித்திரத்தை வியாக்கிர பாத முனிவர், இரணியவர்மச் சக்கரவர்த்திக்குக் கூறினார். அவன் மாசி மகத் தினம் வர, அன்றையப் பொழுதில் சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குக் கொடியேற்றி வைத்தான். 

அப்போது முனிவர்கள் முதலானவர்கள் வந்திருந்து விழாவைத் தரிசித்துக் ‘கனகசபைக்குத் தலைவரே! உங்களை எண்ணி வாழும் உயிர்கள் அனைத்துக்கும் அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்கள். பின்னர் தேவர்கள் அனைவரும் சேர்ந்து, சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தார்கள். 

சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளினார். வருணன் இதனைக் கண்டு ஈசனை எதிர்கொண்டு வணங்கினான். அவனுடன் சேர்ந்து மற்ற தேவர்கள் அனைவரும் சிவ பெருமானை வணங்கி வழிபட்டனர். சிவபெருமான் வருணனது பாசத்தை நீக்கியருளிய துறையிலே திருமஞ்சனமாடி அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனகசபையினுள்ளே எழுந்தருளினார். 

சிதம்பரத்தில் உள்ள பத்துத் தீர்த்தங்களுள் பாசமறுத்த துறையும் ஒன்று. சிதம்பரத்தில் இருந்து சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் இந்த துறை உள்ளது. மாசி மகம் தினத்தில் விரதம் இருந்து பாசமறுத்த துறையில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். 

இந்த தினத்தில் இறைவனை வழிபடுவதுடன் இத்துறையில் நீராடினால் பாவங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகத்தில் வரும் புண்ணிய நாள் மாமாங்கம் எனப்படும். கும்பகோணத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கொழும்பு: தங்கள் நாட்டு மக்களுக்கு, இந்தியா, விசா கெடுபிடியை அதிகரித்துள்ளதற்கு, இலங்கை அரசு, கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, ஈரான், ஈராக், சூடான்,சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, சுற்றுலா விசா வழங்குவதற்கான கெடுபிடிகளை, மத்திய அரசு அதிகரித்துள்ளது. மேற்கண்ட நாடுகளின் பட்டியலில், தங்கள் நாட்டின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதற்கு, இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து, இலங்கை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கெகிலிய ரம்புவெலா கூறியதாவது: இந்திய அரசின் விசா கெடு பிடி நடவடிக்கையில், இலங்கை பெயரை சேர்த்துள்ளது நியாயமில்லாதது. இதன் மூலம், இலங்கைக்கு, இந்தியா போதிய மதிப்பளிக்கவில்லை, என கருதுகிறேன். இதே போன்ற நடவடிக்கையை நாங்கள் எடுப்போமா என்பதை கூற முடியாது. எனினும், இந்த பிரச்னையை தூதரக அளவில் தீர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். 

பதிவு செய்த நாள்

14பிப்
2014 
12:01
புதுடில்லி: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், தண்ணீர் பிரச்னை. மின் பிரச்னை ஆகியன குறித்து பிரதமரிடம் எடுத்து கூறினேன். தமிழக மக்களின் நலனுக்காக கடிதம் மட்டும் எழுதினால் போதுமானது அல்ல. ஜெ., பிரதமரை, ஜனாதிபதியை சந்திக்க வேண்டியது தானே ! என்று டில்லியில் விஜயகாந்த் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். நேற்று தாக்கலான பட்ஜெட் மக்கள் தூற்றும் பட்ஜெட். இது போற்றுகின்ற பட்ஜெட் அல்ல. இவ்வாறு விஜயகாந்த் கூறுகிறார்.

புதுடில்லி: அரியானா மாநிலம் குர்காவுனைச் சேர்ந்த காங்.எம்.பி. ராவ் இந்தர்ஜித்சிங், கடந்த ஆண்டு பார்லி. கூட்டத்தொடரின் போது, காங்.தலைவர் சோனியா மருமகன் ,ராபர் வத்ரா மீதான நிலமோசடி புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என பகிரஙகமாக அறிக்கை வெளியிட்டு பேசினார். இதனால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது.இந்நிலையில் காங்.கட்சியில் இருந்து விலகிய ராவ் இந்தர்ஜித்சிங், தனது ஆதரவாளர்களுடன் நேற்று , பா.ஜ.வில் முறைப்படி இணைந்தார். தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பா.ஜ.வின் தன்னை இணைத்துக்கொண்டார். ராவ் இந்தர்ஜித் கூறுகையில், 36ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன், இப்போது விலகிவிட்டேன். இந்த முடிவை நான் அவ்வளவு எளிதாக எடுக்கவில்லை. இப்போது பா.ஜ.வில் இணைந்தது எனக்கு நிம்மதியை அளிக்கிறது என்றார்.
Click Here


பதிவு செய்த நாள்

13பிப்
2014 
23:04
சென்னை: ""யாருடன் கூட்டணி என்பதை, டில்லியில் அறிவிப்பேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

அவர், தனது கட்சி எம்.எல்.ஏ., க்களுடன் நேற்று, டில்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் கூறுகையில், ""தமிழக பட்ஜெட் போற்றும் விதமாக இல்லை; தூற்றும் விதமாக உள்ளது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, டில்லியில் அறிவிக்கப்படும்,'' என்றார்.

திருச்சி: திருச்சியில் தி.மு.க., மாநாடு நாளை நடப்பதை முன்னிட்டு தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களிடம் பேசியதாவது: இந்தியாவின் ஒற்றுமை, மதவாதம், ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை முன்வைத்து வரும் லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வோம். விஜயகாந்த் பிடி கொடுக்காமல் இருக்கிறார். இவர் ஒரு ஸ்டண்ட் நடிகர். எதிரிகளுக்கு பிடி கொடுக்காமல் இருப்பது போல் விஜயகாந்த்தும், கூட்டணி அழைப்பிற்கு பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார். நான் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளேன். தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் எங்கள் அணியில் இணைவது போல் விஜயகாந்தும் தமது அணிக்கு வருவார் என்ற எனது நம்பிக்கை வீண் போகாது என கருதுகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:


சோனியா-கனிமொழி சந்திப்பின் பின்னணி என்ன?

சமீபத்தில், கனிமொழி உடல் நலம் சரியில்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, திரும்பினார். இந்த செய்தியை பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டன. இதனால், அதை பற்றி அறிந்து கொள்ள சோனியா விரும்பினார். அதனால் தான் கனி மொழி சோனியாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை.

2ஜிவை வைத்து காங்., மிரட்டுகிறதா?

இது குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை வைத்து அவ்வாறு பொதுமக்கள் கருதுகின்றனர். ஆனால், அடிப்படை உண்மை என்ன என்று எனக்கு தெரியாது.

தி.மு.க.,வின் நிதிநிலை சரியாகிவிட்டதா?

கட்சியின் நிதிநிலை பெருகி வருகிறது. ஆனால், முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு சரியாகவில்லை.

மத்தியில் அடுத்து யார் ஆட்சி அமையும்?

அணிகள் மாறுவதற்கும், அதன் காரணமாக ஆட்சி மாறுவதற்கும் மக்களின் எண்ணம் மாறுதல் அடிப்படையில் மறுப்பதற்கு இல்லை. திட்டவட்டமாக எந்த கட்சி இந்தியாவில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று சொல்ல முடியாது. சொல்லவும் விரும்பவில்லை.

2ஜி குற்றசாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன?

2ஜி விவகாரம் அப்பொழுது பூதாகரமாக, கொட்டைஎழுத்துக்களில் வெளியிடப்பட்டது. 80, 90 ஆயிரம் கோடி ரூபாய் என்ற தொகை என்று வெளியான தகவல்கள் எல்லாம், வெடித்த பலூனை போல இப்போது சுருங்கி போனது.

தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதா?

4.5 சதவீதமாக ஆகியிருக்கிறது. 2014.2015ம் ஆண்டு பட்ஜெட்டில், வளர்ச்சி விகிதம் மிகவும் கவலைக்கிடமான முறையில் தமிழகத்தில் அமைந்துள்ளது. இதை நான் புள்ளிவிவரங்களுடன் கூறி உள்ளேன்.

தே.மு.தி.க., உங்கள் அணிக்கு வருமா?

தே.மு.தி.க., விஜயகாத் ஒரு ஸ்டண்ட் நடிகர். சண்டை காட்சிகளில் பிடி கொடுக்கமாட்டார். அதுபோலவே, கூட்டணி விஷயத்திலும் பிடி கொடுக்காமல் இருக்கிறார். அவரும், அவருடைய கட்சியும் தி.மு.க., கூட்டணியோடு இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை நான் இரண்டொரு முறை குறிப்பிட்டிருக்கிறேன். தமிழக மக்களை இன உணர்வோடும், ஒற்றுமையோடும் வாழ வைக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் அணிக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். எனது நம்பிக்கைக்கு விஜயகாந்த்தும் விதிவிலக்கல்ல.

ஜெ.,மீது வழக்குள்ள நிலையில் கம்யூ.,கள் கூட்டணி வைத்துள்ளார்களே?

இது அரசியல் அடிமைத்தனம்.

தேர்தல் பிரசாரத்தில் எந்த கருத்தை முன்நிறுத்துவீர்கள்?

இந்திய நாட்டு ஒற்றுமையை, மதவாதமற்ற தன்மையை, ஊழல் அற்ற நிர்வாகத்தை, மற்றவர்களை மதித்து, அரசியல் நடத்த தெரிந்த, அண்ணதுரையின் கொள்கையை மையமாக வைத்து, நாங்கள் லோக்சபா, சட்டசபை தேர்தல்களிலும் பிரசாரம் செய்வோம்,

கட்சியில் தண்டிக்கப்பட்டவர்கள் மன்னிக்கப்படுவர்களா?

மன்னிக்கப்படுவது போல் நடந்து கொண்டால் மன்னிக்கப்படுவார்கள்.

பார்லி.,யில் மிளகாய்பொடி வீச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?

பல ஆண்டு காலமாக சட்டமன்ற, பாராளு மன்ற ஜனநாயகத்தை உருவாக்கி, வெற்றி கரமாக நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள உறுப்பினர்களாலேயே, அது பாழ்படுத்தப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் பதவி மீது உங்களுக்கு ஆசை உண்டா?

என்னுடைய உயரம் எனக்கு தெரியும் .

3வது அணி குறித்து உங்கள் கருத்து என்ன?

கருத்து கூற விரும்பவில்லை.

இந்த மாநாட்டில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்களா?

மவுனம் தான் இந்த கேள்விக்கு பதில்.

இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.

ஆமதாபாத்: இ கவர்னன்ஸ் நாட்டில் முழுமை பெற்றால் மக்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்க முடியும் என்றும், இதன் மூலம் வேகமான வளர்ச்சி பணிகள் நடக்கும் என்றும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாஸ்காம் கார்ப்பரேட் நிறுவன அதிபர்களிடம் பேசுகையில் தனது ஆவலை தெரிவித்தார்.

நாஸ்காம் (தகவல் தொழில் நுட்ப துறை அமைப்பினர் ) , கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று பேசியதாவது: இன்றைய நிலையில், இளைஞர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு, அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அடுத்த 8 ஆண்டுகளில், நாடு தனது வைரவிழா சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது,. அதற்குள், நாட்டை முற்றிலும் மாற்றியாக வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தையும், திறமையையும் ஒருங்கிணைப்பதன் மூலம் நாளைய வளமான இந்தியாவை உருவாக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, இதை செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்த தலைவர்கள், சரியான தீர்வுகளை எடுக்காமல், குழப்பிவிட்டனர்.

இ-கவர்னன்ஸ் என்பது, மக்கள் பிரச்னைகளை சுலபமாக தீர்க்க உதவும். விரைவான, வேகமான வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். நாட்டில் 4 ல் ஒரு பகுதி இந்த தேசத்தில் இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் நாம் எலக்ட்ரானிக் துறையில் மக்களின் சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எலக்ட்ரானிக் துறை தற்போது முக்கிய தேவையாக உள்ளது. சைபர் பாதுகாப்பு பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் இது தான் புரட்சி ஏற்படுவதற்கான தருணம். இதற்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்ப துறையினர் துணை நிற்க வேண்டும். கொள்கைகளை சமூக வலைதளங்கள் உருவாக்குகின்றன. இது என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

புதுடில்லி: நாட்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியிலிருந்து 27 கோடியாக குறைந்துள்ளது எனமத்திய் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் திட்டத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சு்க்லா தெரிவித்துள்ளதாவது: கடந்த 2011-12-ம் ஆண்டில் நாடு மழுவதும் தேசிய மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. வீடுகளில் நுகர்வுக்காக செலவிடப்படும் தொகையின்அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. 
ஆய்வின் முடிவில் கடந்த 2004-05-ம்ஆண்டில் இருந்த ஏழைகளின்எண்ணிக்கையான 40 கோடியிலிருந்து 2011-12-ல் 27 கோடியாக குறைந்துள்ளது.நாட்டிலேயே உ.பி.,மாநிலத்தில் தான் அதிக அளவிலான சுமார்5.98 கோடி அளவிற்கு ஏழை மக்கள் உள்ளனர். இரண்டாம் இடத்தில் பீகார் மாநிலம் உள்ளது. இங்கு 3.58 கோடி பேர் ஏழைகளாக உள்ளனர். ம.பி.,யில் 2.34 கோடி, மகாராஷ்டிரத்தி்ல 1.97 கோடி, மே.வங்கத்தி்ல 1.84 கோடி பேர்கள் ஏழைகளாக உள்ளனர். 
கிராமப்புறங்களை பொறுத்தவரையில் 2 தனி நபர் நுகர்வு447 என்றும் நகர்புறங்களில் 579 ரூபாயாகவும் இருந்தது. அவை 2011-12-ம் ஆண்டில் முறையே 816 ஆகவும், நகர்புறங்களில் ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என ராஜிவ்சுக்லா தெரிவி்த்துள்ளார்.
Click Here
புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை பயன்படுத்தி தான் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது காங்கிரஸ் அல்லாத, பா.ஜ., அல்லாத 3வது அணிக்கு தலைவராகவோ ஆவதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். இதற்காக ஹசாரேவிற்கு கடிதம் ஒன்றையும் திரிணாமுல் காங்கிரஸ் எழுதி உள்ளது.

ஹசாரோவின் பொருளாதார திட்டங்களை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்வது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் முகுல் ராய், ஹசாரேவிற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். திரிணாமுல் காங்கிரசின் ஆதரவை ஏற்றுக் கொள்வதாக ஹசாரேவும் பதில் அனுப்பி உள்ளார். ஹசாரே தனது கடிதத்தில், கிராமம் சார்ந்த சமூகம், பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகள், ஊழலுக்கு எதிரான சட்டங்கள் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய 17 அம்சங்கள் அடங்கிய திட்ட விபரங்களை குறிப்பிட்டு அனுப்பி உள்ளார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முகுல் ராய் எழுதிய கடிதத்தில், இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் மம்தா அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருவதாக கூறி உள்ளார். 
மேலும் சமூகத்தை தூய்மை ஆக்குவதற்காக ஊழலுக்கு எதிராக ஹசாரே மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும், அதுற்காக அவர் நடத்தி வரும் போராட்டங்களுக்கும் முகுல் ராய் பாராட்டு தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக தங்கள் தலைவர் மம்தா ஹசாரே மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் முகுல் ராய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹசாரேவின் கொள்கை திட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஒப்பதல் தெரிவித்தால், காந்தியவாதியான அன்னா ஹசாரே மம்தாவை பிரதமர் வேட்பாளராக்க ஆதரவு தெரிவிப்பார் என்பது திரிணாமுல் காங்கிரசின் திட்டம். ஹசாரேவின் ஆதரவுடன் பிரதமர் வேட்பாளரானால் அது முதல்வராக இருக்கும் மம்தாவிற்கு கூடுதல் பலமாக அமையும் எனவும் அக்கட்சி எதிர்பார்க்கிறது. அவ்வாறு மம்தாவின் பலம் அதிகரிக்கும்பட்சத்தில் 3வது அணியில் சேர விரும்பும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் தானாக முன்வந்து மம்தாவை பிரதமர் வேட்பாளராக்க ஆதரவு தருவார்கள் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் கணக்கிட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தவிர மாநில கட்சிகளைச் சேர்ந்த அதிமுக தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோருக்கும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு லோக்சபா தேர்தலில் செல்வாக்கு இருக்கும் என கூறப்படுகிறது. முலாயம் சிங் மற்றும் நிதிஷ்குமாருடன் ஒப்பிடுகையில் மம்தாவின் பலம் சற்று கூடுதலாகவே உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சம பலத்துடனும், பிரதமர் கனவிலும் இருக்கும் ஜெயலலிதா, மாயாவதி, முலாயம் உள்ளிட்டோர் மம்தாவை பிரதமர் வேட்பாளராகவோ அல்லது 3வது அணிக்கு தலைவராகவோ ஏற்பார்களா என்பது சந்தேகமே. 
லக்னோ: நாட்டின் மிக பெரிய மாநிலமான உத்தரபிரசேத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என அதிகப்பட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவருக்கான ஆதரவு மாநில கட்சிகள் மற்றும் ராகுலை விட பல சதவீதம் உயர்ந்திருப்பதாக இந்தியா டூ டே எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் உ .பி., மாநில ஓட்டுக்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இங்கு 80 எம்.பி.,க்கள் தொகுதி உள்ளது. மொத்தம் 534 ல் இங்கிருந்து அதிகம் எத்தனை எம்.பி.,க்கள் தங்களின் கட்சிக்கு கிடைக்கும் என கணக்கு போட்டு வருகிறது. பிரதமர் கனவில் இருக்கும் முலாயம்சிங் எப்படியாவது அதிக தொகுதிகளை பிடிக்க கங்கணம் கட்டி வருகிறது. 

இந்நிலையில் இந்தியா டூ டே சி வோட்டர் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் ; கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால் பா.ஜ.,வுக்கு அதிகப்பட்சமாக 30 தொகுதிகளை பிடிக்க முடியும். காங்கிரசுக்கு 4 தொகுதிகளே கிடைக்கும். அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங் கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு கிடைக்கக்கூடிய தொகுதிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் இது சாத்தியமில்லை. காரணம் பிரதமர் கனவில் இருக்கும் முலாயம்சிங் 3 வது அணி அமைப்போம் என்று பேசி வருகிறார். 

மேலும் தற்போது யார் பிரதமர் ஆக வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு , மோடிக்கு 48 சதவீத்தினர் ஆதரவும், ராகுலுக்கு 15 சதவீதத்தினரும், ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலுக்கு 21 சதவீதத்தினரும், முலாயம்சிங்கிற்கு 19 சதவீதத்தினரும், மாயாவதிக்கு 12 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மாநிலத்தில் யார் முதல்வராக விருப்பம் என்ற கேள்வி கேட்டதில் , அதிகப்பட்சமாக மாயாவதிக்கு 28 சதவீதம் பேரும், , அகிலேசுக்கு 12 சதவீதத்தினரும், முலாயமுக்கு 13 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மின்சாரம் தட்டுப்பாடு இங்கு பெரும் பிரச்சனையாக இருப்பதால் மாநில வளர்ச்சியில் 40 சதவீதத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது போல் சட்டம் ஒழுங்கு, சாலை அமைப்புகள் போதியவை அதிருப்தி அளிப்பதாவும் கூறியுள்ளனர்.

குறிப்பாக இந்த மாநிலம் முழுவதும் மோடிக்கு ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு வளர்ந்திருப்பதாகவும் இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
புதுடில்லி: பல்வேறு குற்றம் புரிந்தது தொடர்பாக வளைகுடா நாட்டு சிறைகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 3 ஆயிரத்து 497 பேர் வாடி வருவதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி இந்த விவரத்தை தெரிவித்தார்.
அவையில் அவர் கூறியதாவது: வளைகுடா நாட்டு சிறைகளில் 3 ஆயிரத்து 497 பேரில் ஆயிரத்து 400 பேர் ஐக்கிய அரபு எமிரெட் ( ரியாத்) சிறையில் அதிகம் அடைப்பட்டுள்ளனர். 568 பேர் ஜெட்டாவிலும், 250 பேர் குவைத்திலும், 106 பேர் ஏமனிலும், கத்தார் மற்றும் பக்ரைனில் 178 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றம் தொடர்பானவர்கள். குறிப்பாக விசா, போலி ஆவணங்கள், திருட்டுத்தனமாக நாட்டில் குடியேறுதல், இந்த தகவலை அந்நாட்டு இந்திய அமைப்பு அலுவலகம் தரப்பில் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

இவர்களை மீட்க நமது இந்திய அமைப்பு சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவான விசாரணை நடத்தி, முடிவுக்கு வழி வகுக்கவும் கோரியுள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

இவர்களை மீட்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லை என சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
புதுடில்லி: பல்வேறு குற்றம் புரிந்தது தொடர்பாக வளைகுடா நாட்டு சிறைகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 3 ஆயிரத்து 497 பேர் வாடி வருவதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி இந்த விவரத்தை தெரிவித்தார்.
அவையில் அவர் கூறியதாவது: வளைகுடா நாட்டு சிறைகளில் 3 ஆயிரத்து 497 பேரில் ஆயிரத்து 400 பேர் ஐக்கிய அரபு எமிரெட் ( ரியாத்) சிறையில் அதிகம் அடைப்பட்டுள்ளனர். 568 பேர் ஜெட்டாவிலும், 250 பேர் குவைத்திலும், 106 பேர் ஏமனிலும், கத்தார் மற்றும் பக்ரைனில் 178 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றம் தொடர்பானவர்கள். குறிப்பாக விசா, போலி ஆவணங்கள், திருட்டுத்தனமாக நாட்டில் குடியேறுதல், இந்த தகவலை அந்நாட்டு இந்திய அமைப்பு அலுவலகம் தரப்பில் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

இவர்களை மீட்க நமது இந்திய அமைப்பு சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவான விசாரணை நடத்தி, முடிவுக்கு வழி வகுக்கவும் கோரியுள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

இவர்களை மீட்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லை என சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

புகைப்படம்