ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

திங்கள், 18 ஏப்ரல், 2016

TN election 2016


ர்தலை சந்திக்க எல்லா கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு!... * உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் - பென்னாகரத்தில் அன்புமணி * காங்கிரசில் வழக்கம் போல் கடைசி நேரம் வரை காத்திருப்பு
மாற்றம் செய்த நாள்: ஏப் 19,2016 00:08
எழுத்தின் அளவு:  
சட்டசபை தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு தீவிரமடைந்துள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உளுந்துார்பேட்டையிலும் பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி, பென்னாகரத்திலும் போட்டியிடுகின்றனர். வழக்கம் போல காங்கிரசில் மட்டும் காத்திருப்பு படலம் கடைசி வரை நீடிக்கும் என தெரிகிறது.

* கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கடலுார் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியிலும்; 2011ல் விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக, உளுந்துார்போட்டை தொகுதியில் அவர் போட்டியிடுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது
* பா.ம.க., சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி,தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இவர் தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.பி.,யாக இருக்கிறார். தற்போது அந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம் சட்டசபைதொகுதியில் போட்டியிடுகிறார்

* ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது


1
2
* ம.ந.கூ.,வில் சேர்ந்துள்ள த.மா.கா.,விலும் வேட்பாளர் தேர்வு இறுதி வடிவம் பெற்றுள்ளது. பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சித் தலைவர் வாசன் நேற்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியும் 41 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று இறுதி செய்யவுள்ளது. அதற்காக டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா வீட்டில் இன்று மாலையில் 13 பேர் கொண்ட மத்திய தேர்தல் குழு கூடுகிறது. அக்கூட்டத்தில் தொகுதிக்கு ஒருவர் வீதம் கொண்ட பட்டியலை சோனியா தேர்வு செய்த பின் நாளை இரவுக்குள் பட்டியல் வெளியிடும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அக்கட்சியில், இளங்கோவன், சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட பல கோஷ்டிகள் இருப்பதாலும் அவர்களது ஆதரவாளர்களுக்கு 'சீட்' வழங்கப்பட வேண்டும் என்பதாலும், நாளை பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வழக்கம்போல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் வரைக்கும் காங்கிரசார் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தஞ்சையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்


தஞ்சாவூர்: வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கேலாகலமாக நடந்தது. இதில், ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உலக பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மேலராஜவீதி தேரடியில் இருந்து துவங்கியது. திருமுறை பாடல்கள் ஓத, சிவகனம் இசைக்க, கோலாட்டத்துடன், சங்கு ஊத கோலாகலமாக நடந்த திருத்தேரோட்டம் நகரின் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தன. பக்தர்கள் வசதிக்காக 14 நிலைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருத்தேராட்டத்தை ஒட்டி தஞசை நகரமே விழாக்கோவலம் பூண்டுள்ளது. விழாவில், கலெக்டர் சுப்பையன், அரண்மணை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ஜெஜெ கூட்டம்


ரூ.200, சாப்பாடு, தண்ணி எதுவும் தரல..
ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மக்கள் போராட்டம்

அன்னூர்: சாப்பாடு, தண்ணீர், ரூ.200 பணம் எதுவும் தரவில்லை எனக் கூறி ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட 650 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 பஸ்களை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற

- See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=87242

சனி, 9 ஏப்ரல், 2016

மும்மூர்த்திகளின் பிடியில் சிக்கி தவிக்கும் வாசன்


அ.தி.மு.க., தலைமையின் அழைப்புக்காக காத்திருந்த த.மா.கா., தலைவர் வாசன், இப்போது கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார். கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு வெறும், ஏழு தொகுதிகளை மட்டும் ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதா, மீதமுள்ள, 227 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அதே வேகத்தில், 9ம் தேதி முதல், பிரசார பயணத்தையும் துவங்க திட்டமிட்டு உள்ளார்.இதில், இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்பட்ட பின்னே, அக்கட்சிகளுக்கு, ஏழு தொகுதிகள் கிடைத்துள்ளன.இந்த சூழ்நிலையில், 24 தொகுதிகள் கேட்டதுடன், தன் கட்சிக்காக, தென்னந்தோப்பு சின்னத்தையும் பெற்றுள்ள வாசனுக்கு, எந்த பதிலும் சொல்லாமல், வேட்பாளர் பட்டியலை, ஜெயலலிதா வெளியிட்டு உள்ளார்.
இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன், வாசன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சி வட்டாரம் கூறியதாவது:மூத்த நிர்வாகிகளாக உள்ள எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஞானதேசிகன், ஞானசேகரன் ஆகிய மூவரும், அ.தி.மு.க., கூட்டணியில் தான் சேர வேண்டும் என்பதில், பிடிவாதமாக இருக்கின்றனர். அவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே, அ.தி.மு.க.,வுக்கு வாசன் துாது மேல் துாது அனுப்பி வந்தார். கருணாநிதி எதிர்ப்பாளர்களாக உள்ள இம்மூவரும், போட்ட துாபம் காரணமாக, வாசனுக்கும் தி.மு.க., மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனால், அ.தி.மு.க., கூட்டணி வாய்ப்பை மட்டுமே பரிசீலித்தார். வேறு அழைப்புகள் வந்தபோதும், அதை பெரிதுபடுத்த தவறி விட்டார். ஜெயலலிதாவோ, தாம் கிழித்த கோட்டுக்குள் நிற்குள் கட்சிகளையே விரும்புகிறார். அந்த கட்சிகளை மட்டுமே அணியில் சேர்த்துள்ளார்.தனிச் சின்னம், அதிக தொகுதிகள் என்பதை அவர் ஏற்கவில்லை. வாசனுக்கு இடமில்லை என்பதை, சொல்லாமல் சொல்லி விட்டார். ஆனாலும், இந்த மும்மூர்த்திகள், வாசனை விடுவதாக இல்லை. 'இரட்டை இலை சின்னமாக இருந்தாலும் பரவாயில்லை; எவ்வளவு தொகுதிகள் கொடுத்தாலும் பரவாயில்லை; அத்தனையிலும் வெற்றி பெறலாம்' என, வாசனிடம் வற்புறுத்தி வருகின்றனர். அதையடுத்து, அ.தி.மு.க.,விடம் மீண்டும் பேச துவங்கி உள்ளனர். அங்கிருந்து என்ன பதில் வருகிறதோ தெரியவில்லை.இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.- நமது சிறப்பு

தேமுதிக - 104, மதிமுக - 30, தமாகா - 29 தொகுதிகளில் போட்டி?


தேமுதிக - 104, மதிமுக - 30, தமாகா - 29 தொகுதிகளில் போட்டி?
சென்னை : தேமுதிக-மக்கள் நல கூட்டணி சார்பில் தேமுதிக 104 தொகுதிகளிலும், மதிமுக 30 இடங்களிலும், தமாகா 29 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக- மக்கள் நல கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வாசனை மக்கள் நல கூட்டணி தலைவர்கள் இன்று பிற்பகலில் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பிற்கு பிறகு, மக்கள் நல கூட்டணியில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாசன் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட்டணி குறித்து வாசன் இதுவரை மலுப்பலாக பதிலையே அழித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். காங்.,ல் மீண்டும் வந்து இணைய இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் தமாகா, காங்.,விட்டு வெகு தூரம் சென்று விட்டது என பதிலளித்துள்ளார்.இந்நிலையில், தேமுதிக- மக்கள் நல கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், தேமுதிக 100 முதல் 104 இடங்களிலும், தமாகா 29 தொகுதிகளிலும், மதிமுக 30 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் 71 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் சேருவதற்கு 25 சீட்கள் ஒதுக்க வேண்டும் என கேட்ட வாசன், மநகூ.,விடம் 30 சீட்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமாகா உடனான கூட்டணி குறித்து இன்று மாலைக்குள் முடிவு செய்யப்படும். நாளை நடைபெறும் மாநாட்டில் தேமுதிக.,வின் முதல் வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதி விபரங்கள் வெளியிடப்படும். பின்னர் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். பண பட்டுவாடா குறித்து பல புகார்கள் அளித்த பிறகும் தேர்தல் கமிஷனின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக இல்லை என தெரிவித்துள்ளார்.

புதன், 6 ஏப்ரல், 2016


Tamil News >> All Newspapers
Tamil Newspapers (30)

தினமலர்
பி பி சி தமிழ்
தினகரன்
தினமணி
OneIndia தமிழ்
சினிமா எக்ஸ்பிரஸ்
விகடன்
கணேஷ ஸ்பீக்ஸ்
நக்கீரன்
NewsBuzzaar
Awesomecuisine Tamil
கலாட்ட
Boldsky தமிழ் - oneindia
Drivespark தமிழ் - oneindia
Goodreturns தமிழ் - oneindia
Career India தமிழ் - oneindia
Astroyogi Tamil
விடுதலை
சமையல் குறிப்பு
A N N News
Next
QUICK ACCESS
Country & Language
Newspapers
Browse By Category
Newspaper By Languagehttp://m.dailyhunt.in/news/india/tamil-newspapers

விஜயகாந்த் முடிவால் பா.ம.க.,வுக்கு பலன்: சொல்கிறார் அன்புமணி


கோவை: பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளது, பா.ம.க.,வுக்கு நல்ல பலனை கொடுக்கும். விஜயகாந்த் அறிவிப்பால், கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட குழப்பங்கள் போய்விட்டன. தனித்துப் போட்டி என்ற விஜயகாந்த் முடிவை, இறுதி முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என பா.ம.க., ஏற்கனவே தெளிவாக அறிவித்து விட்டது. கூட்டணிக்காக மற்ற கட்சிகளை தேடிப்போக மாட்டோம். இந்த முறை மக்கள், பா.ம.க.,வுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. கருணாநிதி தலைமையில், தி.மு.க., மூழ்கும் கப்பலாக மாறிவிட்டது. இதனால், அக்கட்சி லோக்சபா தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது எனக் கூறினார்