ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மாநகரில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி எப்போது துவங்கும்? எட்டு மாதங்களாக காத்திருப்போர் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25செப்
2014 
22:56
கோவை : கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் இயல்பு நிலைக்கு வந்துள்ள நிலையில், கடந்த எட்டு மாதங்களாக குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நிறுத்தி வைத்திருப்பதால், மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். எப்போது குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துவங்கும் என்பது தெரியாமல், மக்கள் அலைமோதுகின்றனர்.

கோவை மாநகராட்சியில், சிறுவாணி, பில்லுார், ஆழியாறு குடிநீர் திட்டங்கள் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, மூன்று குடிநீர் திட்டங்கள் மூலமும் திருப்திகரமாக குடிநீர் கிடைத்ததால், மாநகராட்சியின் காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 380 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு தரப்பட்டது. அதன்பிறகு, குடிநீர் பற்றாக்குறையால், இணைப்பு தருவது நிறுத்தப்பட்டது. இந்தாண்டு பிப்., 13க்கு பிறகு, புதிய இணைப்பு தரப்படவில்லை. இதற்கிடையே, குடிநீர் இணைப்பில், பிளம்பர்கள், அதிகாரிகள் கைகோர்த்து தவறு செய்வதை தடுக்கவும், அனைத்து பிளம்பர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையிலும், கடந்த மாதம், 25ம் தேதி, குடிநீர் இணைப்புக்கு 'ஆன்-லைனில்' விண்ணப்பிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதில், சிரமங்கள் உள்ளதாலும், அதற்கான சாப்ட்வேர் பணி நிறைவடையாததாலும், தற்போது, மண்டல அலுவலகத்தில் மட்டுமே குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.மண்டல அலுவலகத்தில், 125 ரூபாய் கட்டணம் செலுத்தினால், ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை, 3280 பேர், குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும், 'எப்போது குடிநீர் இணைப்பு வழங்கப்படும்' என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலை யில், மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், குடி நீர் இணைப்பு வழங்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தேர்தல் முடிந்து புதிய மேயர் பொறுப்பேற்றுள்ள நிலையில், குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பித்தவர்கள், யாரை அணுக வேண்டும் என்று தெரியாமல், மாநகராட்சி அலுவலகத்தில் முட்டி மோதுகின்றனர்.

இணைப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டட உரிமையாளர்கள் கூறுகையில், 'மாநகராட்சி துவங்கியுள்ள 'ஆன்-லைன்' திட்டத்தால், இடைத்தரகர்கள் குறுக்கீடு இருக்காது என்பதால் வரவேற்கிறோம். பொதுமக்கள் அனைவருக்கும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க தெரியாது. வேறு ஒருவரை அணுகும் போது, இடைத்தரகர்கள் தலையீடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே சிரமமின்றி குடிநீர் இணைப்பு பெறுவதற்கு ஏற்ற வகையில், திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அன்றாடம் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தாமல், மாநகராட்சிக்கு அலைக்கழிக்காமல் அதிகாரிகள் திட்டமிட வேண்டும்' என்றனர்.

பிளம்பர்கள் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், 'குடிநீர் இணைப்பு வழங்குவதில் நவீன தொழில்நுட்ப முறைகளை வரவேற்கிறோம். அந்தந்த பகுதி பிளம்பர்களுக்கு தான் குடிநீர் குழாய் மெயின் லைன் எங்கிருக்கிறது என்பது தெரியும். அந்தந்த பகுதி பிளம்பர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்க வேண்டும்' என்றனர்.
டில்லி பூங்காவை போல் வண்டலூரிலும் ஆபத்து?
செப்டம்பர் 25,2014
1
தாம்பரம் : டில்லி சம்பவத்தை தொடர்ந்து, வண்டலுார் பூங்காவின் பாதுகாப்பை பலப்படுத்தாததால், ஆபத்தான வகையில், கரடியை அலைபேசியில் படம் பிடிக்கும் செயல் தொடர்கிறது. டில்லி விலங்கியல் பூங்காவில், வெள்ளை புலி அடைத்து ...