ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

ஆமதாபாத்: இ கவர்னன்ஸ் நாட்டில் முழுமை பெற்றால் மக்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்க முடியும் என்றும், இதன் மூலம் வேகமான வளர்ச்சி பணிகள் நடக்கும் என்றும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாஸ்காம் கார்ப்பரேட் நிறுவன அதிபர்களிடம் பேசுகையில் தனது ஆவலை தெரிவித்தார்.

நாஸ்காம் (தகவல் தொழில் நுட்ப துறை அமைப்பினர் ) , கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று பேசியதாவது: இன்றைய நிலையில், இளைஞர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு, அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அடுத்த 8 ஆண்டுகளில், நாடு தனது வைரவிழா சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது,. அதற்குள், நாட்டை முற்றிலும் மாற்றியாக வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தையும், திறமையையும் ஒருங்கிணைப்பதன் மூலம் நாளைய வளமான இந்தியாவை உருவாக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, இதை செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்த தலைவர்கள், சரியான தீர்வுகளை எடுக்காமல், குழப்பிவிட்டனர்.

இ-கவர்னன்ஸ் என்பது, மக்கள் பிரச்னைகளை சுலபமாக தீர்க்க உதவும். விரைவான, வேகமான வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். நாட்டில் 4 ல் ஒரு பகுதி இந்த தேசத்தில் இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் நாம் எலக்ட்ரானிக் துறையில் மக்களின் சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எலக்ட்ரானிக் துறை தற்போது முக்கிய தேவையாக உள்ளது. சைபர் பாதுகாப்பு பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் இது தான் புரட்சி ஏற்படுவதற்கான தருணம். இதற்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்ப துறையினர் துணை நிற்க வேண்டும். கொள்கைகளை சமூக வலைதளங்கள் உருவாக்குகின்றன. இது என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக