ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை பயன்படுத்தி தான் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது காங்கிரஸ் அல்லாத, பா.ஜ., அல்லாத 3வது அணிக்கு தலைவராகவோ ஆவதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். இதற்காக ஹசாரேவிற்கு கடிதம் ஒன்றையும் திரிணாமுல் காங்கிரஸ் எழுதி உள்ளது.

ஹசாரோவின் பொருளாதார திட்டங்களை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்வது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் முகுல் ராய், ஹசாரேவிற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். திரிணாமுல் காங்கிரசின் ஆதரவை ஏற்றுக் கொள்வதாக ஹசாரேவும் பதில் அனுப்பி உள்ளார். ஹசாரே தனது கடிதத்தில், கிராமம் சார்ந்த சமூகம், பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகள், ஊழலுக்கு எதிரான சட்டங்கள் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய 17 அம்சங்கள் அடங்கிய திட்ட விபரங்களை குறிப்பிட்டு அனுப்பி உள்ளார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முகுல் ராய் எழுதிய கடிதத்தில், இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் மம்தா அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருவதாக கூறி உள்ளார். 
மேலும் சமூகத்தை தூய்மை ஆக்குவதற்காக ஊழலுக்கு எதிராக ஹசாரே மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும், அதுற்காக அவர் நடத்தி வரும் போராட்டங்களுக்கும் முகுல் ராய் பாராட்டு தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக தங்கள் தலைவர் மம்தா ஹசாரே மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் முகுல் ராய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹசாரேவின் கொள்கை திட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஒப்பதல் தெரிவித்தால், காந்தியவாதியான அன்னா ஹசாரே மம்தாவை பிரதமர் வேட்பாளராக்க ஆதரவு தெரிவிப்பார் என்பது திரிணாமுல் காங்கிரசின் திட்டம். ஹசாரேவின் ஆதரவுடன் பிரதமர் வேட்பாளரானால் அது முதல்வராக இருக்கும் மம்தாவிற்கு கூடுதல் பலமாக அமையும் எனவும் அக்கட்சி எதிர்பார்க்கிறது. அவ்வாறு மம்தாவின் பலம் அதிகரிக்கும்பட்சத்தில் 3வது அணியில் சேர விரும்பும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் தானாக முன்வந்து மம்தாவை பிரதமர் வேட்பாளராக்க ஆதரவு தருவார்கள் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் கணக்கிட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தவிர மாநில கட்சிகளைச் சேர்ந்த அதிமுக தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோருக்கும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு லோக்சபா தேர்தலில் செல்வாக்கு இருக்கும் என கூறப்படுகிறது. முலாயம் சிங் மற்றும் நிதிஷ்குமாருடன் ஒப்பிடுகையில் மம்தாவின் பலம் சற்று கூடுதலாகவே உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சம பலத்துடனும், பிரதமர் கனவிலும் இருக்கும் ஜெயலலிதா, மாயாவதி, முலாயம் உள்ளிட்டோர் மம்தாவை பிரதமர் வேட்பாளராகவோ அல்லது 3வது அணிக்கு தலைவராகவோ ஏற்பார்களா என்பது சந்தேகமே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக