ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

வியாழன், 30 மார்ச், 2017

தலாக் விவகாரம்

வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மே 11 முதல் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. பலதார திருமணத்தை அனுமதிக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளையும் இணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், மத்திய அரசு உள்ளிட்ட தரப்புகள் உச்சநீதிமன்றத்தில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளன. இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், முத்தலாக் முறைக்கு எதிராக மத்திய அரசு கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்குகள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹெர், என்.வி.ரமணா மற்றும் டிவி.சந்திரசௌத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. முத்தலாக் மற்றும் பலதார மணம் போன்றவை அரசியல் சாசன ரீதியாக அனுமதிக்கப்படக் கூடியதா என்பதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முடிவுசெய்யும் என்று தெரிவித்தனர்.

கோடைகால விடுமுறைக்குப் பின்னர் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை மே 11 முதல் நடக்கும் என்று தெரிவித்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி விடுமுறை தினங்களில் கூட விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரிக்க இருக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹெர் தலைமையேற்பார் என்று தெரிகிறது.

கேரளத்தில் BJP

கேரளத்தில் நடந்த பஞ்சாயத்து வார்டு தேர்தல் ஒன்றில் கம்யூனிஸ்டை மூன்றாம் இடத்திற்கு தள்ளி வெற்றிக் கொடி நாட்டியது பாஜக.

#கோழிக்கோடு_பாலிசேரி_பஞ்சாயத்து.

செல்வராகவனின் அடுத்த படம்

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2-ம் பாகம் தயாராக உள்ளதாக செல்வராகவன் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ ஆகிய படங்கள் அவருடைய திறமையை வெளிப்படுத்திய படங்கள். அதேபோல், ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்த போதிலும், அந்த படங்கள் அனைவரும் ரசிக்கும்படியாகவும், அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற படமாக அமைந்தது.

‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சிம்புவை வைத்து இவர் இயக்கிய ‘கான்’ படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இவருடைய இயக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகத்திற்கான கதையை செல்வராகவன் எழுதி முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படங்கள் இயக்காமல் இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்த இருந்த சமயத்தில் இப்படத்தின் கதைகளை அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இப்போதைக்கு இந்த இரண்டு படங்களையும் இயக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவருக்கு வேறு பணிகள் இருப்பதால் இந்த இரண்டு படங்களையும் இயக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். இருந்தாலும் எதிர்காலத்தில் இப்படங்களின் இரண்டாம் பாகம் வெளிவரும் என அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

MEMS NEWS

காலத்துக்கு ஏற்றாற்போல வேலை வாய்ப்புகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நடப்பு நிகழ்வுகள், அரசியல் அதிரடிகள், காரசார விவாதங்கள் குறித்து போட்டோ/ வீடியோ மீம்களாக உருமாற்றிக் கருத்துச் சொல்லும் நபர்கள், ஐடி பணியாளர்களுக்கு இணையாகச் சம்பாதிக்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

இந்த மாற்றம் குறித்து 'தி இந்து'-விடம் (ஆங்கிலம்) பேசினார் விளம்பரப் படங்கள், சினிமா படங்கள், நிகழ்ச்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் நிறுவனமான 'த சைட் மீடியா' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லோகேஷ் ஜெய்.

''மீம் பொறியாளர் என்ற பதவியை நாங்கள் முதன்முதலாக அறிமுகம் செய்தோம். நம்மிடையே இயந்திரவியல், கட்டிடவியல், மின்னியல், மின்னணுவியல், ஐடி என ஏராளமான துறை பொறியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் தங்களின் கருத்துகளையும், யோசனைகளையும், பார்வையையும் மீம் வழியாகச் சமூகத்துக்குத் தெரிவிக்கும் மீம் பொறியாளர்கள் இல்லை. அதை உருவாக்க ஆசைப்பட்டேன்.

மீம் பொறியாளர்கள் வேலைக்குத் தேவை என்று சமூக ஊடகங்களிலேயே மீம் ஒன்றைப் பதிவு செய்தோம். தமிழகம் முழுக்கவிருந்து சுமார் 100 ரெஸ்யூம்கள் குவிந்தன.

அதில் இருந்து படைப்பாற்றல், செய்திகள் சார்ந்து இயங்கும் ஆர்வம், உடனடியாக, வித்தியாசமாகச் சிந்திப்பது ஆகிய திறமைகளை அடிப்படையாகக் கொண்டு மீம் பொறியாளர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

தற்போது அரசியல், திரை உலகம், மால்கள், உணவகங்கள், விமான போக்குவரத்து என ஏகப்பட்ட இடங்களில் மீம்களின் தேவை எக்கச்சக்கமாக இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 7 - 10 மீம்கள் உருவாக்கப்படுகின்றன. பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் நாட்களில் இந்த எண்ணிக்கை 500-ஐத் தொடும்'' என்றார் லோகேஷ்.

தயாரிப்புகளை விளம்பரப்படுத்துதல்

இதுகுறித்து சமூக ஊடக விளம்பர இயக்குநர் ஒருவர் பேசும்போது, ''பெரிய பிராண்டுகள் கூடத் தங்களின் தயாரிப்புகளை மீம்கள் மூலமாக விளம்பரப்படுத்தித் தரச்சொல்லி எங்களை அணுகுகின்றன. இதற்கு மீம் பொறியாளர்களின் உதவி தேவைப்படுகிறது'' என்கிறார்.

'மீம் மீடியா மார்க்கெட்டிங்' என்று மீம்கள் சார்ந்து இயங்க ஒரு தனிப்பிரிவை வைத்திருக்கிறார் ராம்குமார். நம்மிடம் பேசும்போது, ''சமூக ஊடகங்களில் இயங்குபவர்களின் சராசரி வயது 30-க்கும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு பெரிய பாராக்களில் ஒரு செய்தியைச் சொல்வதை விட, மீம் வழியாகச் சொல்வது எளிதில் சென்றடைகிறது.

இதனாலேயே சமூக ஊடகங்களில் உண்மையான படைப்பாற்றலுடன் இயங்கும் நபர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு வேலை வழங்குகிறோம்'' என்கிறார்.

அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன?

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் சமூக ஊடக மேலாளர்கள் மீம்களுக்காகவே பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளனர். இவர்களின் வேலையே ஒரு கட்சி தன் கருத்தைத் தெரிவிக்கும் போது, எதிர்க்கட்சி அதற்கு புதுமையான மீம்கள் மூலம் பதில் தாக்குதல் செய்வதுதான். அரசியல் வட்டாரத்தில் அவர்கள் 'மீம் பாய்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு அரசியல் பற்றிய அறிவோடு, திரையுலகம் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மீம் பொறியாளர்களின் சம்பளம் குறித்து அதிமுகவின் முன்னாள் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறும்போது, ''ஆரம்ப கட்டத்தில் ரூ.5,000 முதல் ரூ.18 வரை மீம் பொறியாளர்கள் சம்பாதிக்கின்றனர். அதுவே முக்கியமாக கட்டத்தில் ஒரு மீமுக்கு ரூ.25,000 வரை சென்ற நிகழ்வும் இருக்கிறது'' என்கிறார்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

பெங்களூரு திருவள்ளுவர் சிலையைப் பாதுகாக்கும் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார்

பெங்களூரு: பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும், அதே பகுதியில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்க கட்டடத்திற்கும் மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் சிலை உள்ள பூங்காவிலும், தமிழ்ச் சங்க கட்டடம் அருகிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதரடிப்படை கவச வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக நேற்று வெடித்த மிகப் பெரிய வன்முறையால் பெங்களூரே போர்க்களமானது. கன்னட அமைப்பினர் தமிழகத்தை சேர்ந்த பஸ், லாரி, கார்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் பெங்களூருவில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அல்சூரில் திருவள்ளுர் சிலை அமைந்துள்ள பூங்காவை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் அதே பகுதியில் உள்ள தமிழ்ச் சங்க கட்டிடத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாதபடி பெங்களூரு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Heavy security cover to Thiruvalluvar statue in Bangaluru

பெங்களூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் கொண்டாட்டம்....

பெங்களூரு: வன்முறை தலைவிரித்தாடிய பெங்களூரில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த புதிய உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது. தமிழர்களின் வானகங்கள், வர்த்தக நிறுவனங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடந்தேறின. 

இதையடுத்து பெங்களூரில் 16 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும், பிற பகுதிகளில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. இன்று பெங்களூரு மிகவும் அமைதியாக காணப்படுகிறது. அதேசமயம் பதட்டம் குறையவில்லை. ஊரே நிசப்தமாக உள்ளது. மிக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும், புற ராணுவப் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாங்கள் காவலுக்கு இருப்பதாகவும் பெங்களூரு போலீஸார் கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்று பெங்களூரு நகரில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. தொழுகைக்குப் பின்னர் அனைவரும் வீடுகளுக்குப் போகுமாறும், வெளியில் சுற்ற வேண்டாம் என்றும் மத குருமார்கள் தொழுகைக்கு வந்தவர்களுக்கு அறிவுறுத்தினர்.

Bakrid celebrated in Bangaluru amidst heavy security

மக்கள் கொந்தளிச்சா.. கர்நாடக வாதத்தை தூக்கி குப்பையில் போட்ட சுப்ரீம் கோர்ட்

டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர். இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட். தமிழகத்திற்கு தண்ணீரை நிறுத்திவிட்டு முதல்வர் பதவியை உதறுகிறார் சித்தராமையா? பரபரப்பு தகவல் பெங்களூரை 365-வது பிரிவின் கீழ் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்: ராமதாஸ் காவிரி பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் #cauvery Featured Posts தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனுவை அளித்தனர். உடனே விசாரிக்க கோரிக்கை அந்த மனுவில் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மீண்டும் வலியுறுத்தல் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் நேற்று காலை பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இன்று விசாரணை இதன்படி திருத்தம் கோரும் கர்நாடகாவின் மனுவை இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. நீதிபதிகள் கூறியது: மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதையெல்லாம் காரணமாக வைத்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூற முடியாது. இதெல்லாம் கோர்ட்டில் செல்லாது. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை தங்கள் கைகளில் எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கர்நாடகா தரப்பை கண்டித்தனர். காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர். இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்
You cannot take the ground of public agitation, SC says Karnataka