ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 மார்ச், 2017

செல்வராகவனின் அடுத்த படம்

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2-ம் பாகம் தயாராக உள்ளதாக செல்வராகவன் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ ஆகிய படங்கள் அவருடைய திறமையை வெளிப்படுத்திய படங்கள். அதேபோல், ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்த போதிலும், அந்த படங்கள் அனைவரும் ரசிக்கும்படியாகவும், அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற படமாக அமைந்தது.

‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சிம்புவை வைத்து இவர் இயக்கிய ‘கான்’ படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இவருடைய இயக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகத்திற்கான கதையை செல்வராகவன் எழுதி முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படங்கள் இயக்காமல் இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்த இருந்த சமயத்தில் இப்படத்தின் கதைகளை அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இப்போதைக்கு இந்த இரண்டு படங்களையும் இயக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவருக்கு வேறு பணிகள் இருப்பதால் இந்த இரண்டு படங்களையும் இயக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். இருந்தாலும் எதிர்காலத்தில் இப்படங்களின் இரண்டாம் பாகம் வெளிவரும் என அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

சனி, 10 செப்டம்பர், 2016

சத்தமே இல்லாமல் சத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்!

சென்னை: நடிகை அமலாபால், சத்யராஜுக்கு ஜோடியாக முருகவேல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குநர் விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். திருமணத்திற்குப் பின் சில காலம் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருந்த அமலா பால், சமீபகாலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இதற்கிடையே விஜயும், அவரும் விவாவகரத்து வேண்டி நீதிமன்றத்தின் உதவியையும் நாடியுள்ளனர். மீண்டும் அமலா பால் நடிக்கத் தொடங்கியதால் தான் இந்தப் பிரிவு எனக் கூறப்படுகிறது. ஆனால், அடுத்த ரவுண்டுக்குத் தயாரான அமலாபாலுக்கு எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. இப்போதைக்கு தனுஷ் நடிப்பில் உருவாகும் 'வடசென்னை' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். வேறு எந்த படத்திலும் அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில், சத்தமே இல்லாமல் சத்யராஜுக்கு ஜோடியாக அமலாபால் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். 'முருகவேல்' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

Amala Paul becomes Sathyaraj's pair

ரூ 45 கோடிக்குப் போன சிவகார்த்திகேயனின் ரெமோ... போட்ட பணம் வருமா?

தமிழ் சினிமாவில் எந்த புண்ணியவான் ஆரம்பித்து வைத்தாரோ தெரியவில்லை... இப்போதெல்லாம் படங்களின் வியாபாரம் அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோவின் முந்தைய பட கலெக்‌ஷனை அடிப்படையாகக் கொண்டுதான் நடக்கிறது. இதனாலேயே நல்ல ஹிட் கொடுத்த ஹீரோ ஆல்ரெடி நடித்துக்கொண்டிருக்கும் ஏதாவது ஒரு சுமார் படம் மூலம் குப்புற விழுந்து கொள்கிறார். அவர் தப்பி எழுந்து வருவதற்கு படாதபாடு பட வேண்டும். முக்கியமாக வியாபார ஷோ எனப்படும் விநியோகஸ்தர்களுக்கான ஸ்பெஷல் ஷோ இப்போது கிடையவே கிடையாது. நாங்க சொல்றதுதான் ரேட்டு என்னும் அடாவடிதான் நடக்கிறது. அப்படித்தான் சிவகார்த்திகேயனின் ரெமோவும் 45 கோடிக்கு விலை போயிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ரஜினிமுருகன் அள்ளிய கலெக்‌ஷன்தான் இது. இதை வைத்து படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 45 கோடிக்கே போயிருக்கிறது. ரஜினிமுருகன் மெகா ஹிட் ஆக உடன் ரிலீஸான சுமாரான படங்களும் ஒரு காரணம். ஆனால் ரெமோ அப்படி அல்ல... ரெமோவுடன்தான் விஜய் சேதுபதியின் றெக்க, ஜீவாவின் கவலை வேண்டாம் ஆகியவையும் ரிலீஸ் ஆகின்றன. தாங்குவாரா சிவா?

Remo theatrical sold out for Rs 45 cr