ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

வியாழன், 30 மார்ச், 2017

தலாக் விவகாரம்

வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மே 11 முதல் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. பலதார திருமணத்தை அனுமதிக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளையும் இணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், மத்திய அரசு உள்ளிட்ட தரப்புகள் உச்சநீதிமன்றத்தில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளன. இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், முத்தலாக் முறைக்கு எதிராக மத்திய அரசு கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்குகள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹெர், என்.வி.ரமணா மற்றும் டிவி.சந்திரசௌத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. முத்தலாக் மற்றும் பலதார மணம் போன்றவை அரசியல் சாசன ரீதியாக அனுமதிக்கப்படக் கூடியதா என்பதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முடிவுசெய்யும் என்று தெரிவித்தனர்.

கோடைகால விடுமுறைக்குப் பின்னர் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை மே 11 முதல் நடக்கும் என்று தெரிவித்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி விடுமுறை தினங்களில் கூட விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரிக்க இருக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹெர் தலைமையேற்பார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக