சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் பாத்ரூமில் கேமரா வைத்து பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்த நபரைப் போலீஸார் கைது செய்தனர். அவரது வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கார்களில் பொருத்தப்படும் சிவப்பு குழல் விளக்குகள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை சிக்கின. தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறி அவர் நாடகமாடியதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். உரிய முறையில் விசாரணை நடத்திய போது அவர் உண்மையைக் கக்கி விட்டார். இதையடுத்து போலீஸார் அந்த மோசடி ஆசாமியை கைது செய்துள்ளனர். லேடீஸ் ஹாஸ்டலில் நடந்த இந்த அக்கிரமச் செயலால் அங்கு தங்கியுள்ள பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தக் கேமராவில் பதிவான காட்சிகளை கைதான நபர் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
CHADRAKANTHA HERBAL OIL
...
Online sales
வியாழன், 8 செப்டம்பர், 2016
லேடீஸ் ஹாஸ்டலில் பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்து ஆசைக்கு இணங்க மிரட்டிய அயோக்கியன் கைது! Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/fake-cbi-officer-nabbed-taping-women-s-bath-ladies-hostel-262235.html
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக