ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

சனி, 9 ஏப்ரல், 2016

மும்மூர்த்திகளின் பிடியில் சிக்கி தவிக்கும் வாசன்


அ.தி.மு.க., தலைமையின் அழைப்புக்காக காத்திருந்த த.மா.கா., தலைவர் வாசன், இப்போது கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார். கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு வெறும், ஏழு தொகுதிகளை மட்டும் ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதா, மீதமுள்ள, 227 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அதே வேகத்தில், 9ம் தேதி முதல், பிரசார பயணத்தையும் துவங்க திட்டமிட்டு உள்ளார்.இதில், இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்பட்ட பின்னே, அக்கட்சிகளுக்கு, ஏழு தொகுதிகள் கிடைத்துள்ளன.இந்த சூழ்நிலையில், 24 தொகுதிகள் கேட்டதுடன், தன் கட்சிக்காக, தென்னந்தோப்பு சின்னத்தையும் பெற்றுள்ள வாசனுக்கு, எந்த பதிலும் சொல்லாமல், வேட்பாளர் பட்டியலை, ஜெயலலிதா வெளியிட்டு உள்ளார்.
இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன், வாசன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சி வட்டாரம் கூறியதாவது:மூத்த நிர்வாகிகளாக உள்ள எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஞானதேசிகன், ஞானசேகரன் ஆகிய மூவரும், அ.தி.மு.க., கூட்டணியில் தான் சேர வேண்டும் என்பதில், பிடிவாதமாக இருக்கின்றனர். அவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே, அ.தி.மு.க.,வுக்கு வாசன் துாது மேல் துாது அனுப்பி வந்தார். கருணாநிதி எதிர்ப்பாளர்களாக உள்ள இம்மூவரும், போட்ட துாபம் காரணமாக, வாசனுக்கும் தி.மு.க., மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனால், அ.தி.மு.க., கூட்டணி வாய்ப்பை மட்டுமே பரிசீலித்தார். வேறு அழைப்புகள் வந்தபோதும், அதை பெரிதுபடுத்த தவறி விட்டார். ஜெயலலிதாவோ, தாம் கிழித்த கோட்டுக்குள் நிற்குள் கட்சிகளையே விரும்புகிறார். அந்த கட்சிகளை மட்டுமே அணியில் சேர்த்துள்ளார்.தனிச் சின்னம், அதிக தொகுதிகள் என்பதை அவர் ஏற்கவில்லை. வாசனுக்கு இடமில்லை என்பதை, சொல்லாமல் சொல்லி விட்டார். ஆனாலும், இந்த மும்மூர்த்திகள், வாசனை விடுவதாக இல்லை. 'இரட்டை இலை சின்னமாக இருந்தாலும் பரவாயில்லை; எவ்வளவு தொகுதிகள் கொடுத்தாலும் பரவாயில்லை; அத்தனையிலும் வெற்றி பெறலாம்' என, வாசனிடம் வற்புறுத்தி வருகின்றனர். அதையடுத்து, அ.தி.மு.க.,விடம் மீண்டும் பேச துவங்கி உள்ளனர். அங்கிருந்து என்ன பதில் வருகிறதோ தெரியவில்லை.இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.- நமது சிறப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக