ADDVERTISMENT

ADDVERTISMENT
CHANDRAKANTHA HERBAL

CHADRAKANTHA HERBAL OIL

...

Online sales

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

பெங்களூரு திருவள்ளுவர் சிலையைப் பாதுகாக்கும் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார்

பெங்களூரு: பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும், அதே பகுதியில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்க கட்டடத்திற்கும் மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் சிலை உள்ள பூங்காவிலும், தமிழ்ச் சங்க கட்டடம் அருகிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதரடிப்படை கவச வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக நேற்று வெடித்த மிகப் பெரிய வன்முறையால் பெங்களூரே போர்க்களமானது. கன்னட அமைப்பினர் தமிழகத்தை சேர்ந்த பஸ், லாரி, கார்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் பெங்களூருவில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அல்சூரில் திருவள்ளுர் சிலை அமைந்துள்ள பூங்காவை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் அதே பகுதியில் உள்ள தமிழ்ச் சங்க கட்டிடத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாதபடி பெங்களூரு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Heavy security cover to Thiruvalluvar statue in Bangaluru

பெங்களூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் கொண்டாட்டம்....

பெங்களூரு: வன்முறை தலைவிரித்தாடிய பெங்களூரில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த புதிய உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது. தமிழர்களின் வானகங்கள், வர்த்தக நிறுவனங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடந்தேறின. 

இதையடுத்து பெங்களூரில் 16 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும், பிற பகுதிகளில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. இன்று பெங்களூரு மிகவும் அமைதியாக காணப்படுகிறது. அதேசமயம் பதட்டம் குறையவில்லை. ஊரே நிசப்தமாக உள்ளது. மிக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும், புற ராணுவப் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாங்கள் காவலுக்கு இருப்பதாகவும் பெங்களூரு போலீஸார் கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்று பெங்களூரு நகரில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. தொழுகைக்குப் பின்னர் அனைவரும் வீடுகளுக்குப் போகுமாறும், வெளியில் சுற்ற வேண்டாம் என்றும் மத குருமார்கள் தொழுகைக்கு வந்தவர்களுக்கு அறிவுறுத்தினர்.

Bakrid celebrated in Bangaluru amidst heavy security

மக்கள் கொந்தளிச்சா.. கர்நாடக வாதத்தை தூக்கி குப்பையில் போட்ட சுப்ரீம் கோர்ட்

டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர். இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட். தமிழகத்திற்கு தண்ணீரை நிறுத்திவிட்டு முதல்வர் பதவியை உதறுகிறார் சித்தராமையா? பரபரப்பு தகவல் பெங்களூரை 365-வது பிரிவின் கீழ் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்: ராமதாஸ் காவிரி பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் #cauvery Featured Posts தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனுவை அளித்தனர். உடனே விசாரிக்க கோரிக்கை அந்த மனுவில் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மீண்டும் வலியுறுத்தல் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் நேற்று காலை பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இன்று விசாரணை இதன்படி திருத்தம் கோரும் கர்நாடகாவின் மனுவை இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. நீதிபதிகள் கூறியது: மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதையெல்லாம் காரணமாக வைத்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூற முடியாது. இதெல்லாம் கோர்ட்டில் செல்லாது. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை தங்கள் கைகளில் எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கர்நாடகா தரப்பை கண்டித்தனர். காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர். இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்
You cannot take the ground of public agitation, SC says Karnataka

பந்துக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை.. பல்டி அடித்த வாட்டாள் நாகராஜ்!

பெங்களூரு: பெங்களூரில் நாளை பந்த் நடத்த பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தான் பந்த் நடத்த அழைப்பு விடுக்கவில்லை என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் மறுத்துள்ளார். நேற்று பெங்களூரில் ஆடித் தீர்த்து விட்ட வெறியாட்டத்தால் தமிழர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக பெரும் பொருள் இழப்பை தமிழர்களுக்கு கன்னட வன்முறையாளர்கள் ஏற்படுத்தி விட்டனர். நகரையே தங்களது வன்முறை வெறியாட்டத்தால் துவம்சம் செய்து விட்டது இந்தக் கும்பல். திட்டமிட்ட வன்முறை வெறியாட்டமாக இது இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று விதான் சவுதாவை தனது கட்சியினருடன் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கைதானார் வாட்டாள் நாகராஜ். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் நாளை பெங்களூரில் பந்த் நடத்த பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் பந்த்துக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை என்று வாட்டாள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாட்டாள் கூறுகையில், நான் பந்த் நடத்த அழைப்பு விடுக்கவில்லை. செப்டம்பர் 15ம் தேதி ரயில் மறியல் செய்ய மட்டுமே அழைப்பு விடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தாலும் கூட இன்றே பெங்களூரில் பந்த் போலத்தான் காணப்படுகிறது. ஒரு கடையும் திறக்கப்படவில்லை. பஸ்கள் ஓடவில்லை. மக்கள் பெரும் பீதியுடன்தான் உள்ளனர். தமிழர்கள் வெளியில் வரவே அஞ்சும் நிலைதான் தொடர்கிறது.

Vatal Nagraj says he has not called for bandh tomorrow

இன்று கர்நாடக பந்த்... யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் நடத்தவுள்ள பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மக்கள் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது கர்நாடகத்தில் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கன்னட அமைப்புகள் பலவும் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளன. போராட்டங்களில் குதித்துள்ளன. இதில் வன்முறையும் தலை தூக்கியுள்ளது. இந்த நிலையில் இன்று கர்நாடகம் முழுவதும் மாநிலம் தழுவிய அளவில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து விரிவான பாதுகாப்புக்கு கர்நாடக போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். முழு அளவில் பந்த் கர்நாடகத்தில் இந்த பந்த் முழு அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பயம், அச்சம் காரணமாகவே பாதிப் பேர் கடை, வர்த்தக நிறுவனங்களை மூடி விடுவார்கள். தனியார் பள்ளிகள் நாளை முழமையாக இயங்காது. பொதுப் போக்குவரத்தும் அடியோடு பாதிக்கப்படும் என்றே தெரிகிறது. தமிழ்ப் படம் கிடையாது.. சேனலும் தெரியாது ஏற்கனவே கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் டிவி சேனல்கள் தெரியவில்லை. நிறுத்தி விட்டனர். தியேட்டர்களிலும் தமிழ்ப் படங்களைத் தூக்கி விட்டனர். நாளை தியேட்டர்களும் மூடப்படுகின்றன. ஒரு படமும் ஓடாது என்று திரைப்பட அமைப்புகள் அறிவித்துள்ளன. புதிய கன்னடப் படங்களை வெளியிடுவதையும் சனிக்கிழமைக்குத் தள்ளி வைத்துள்ளனர். மைசூரு சாலையை தவிர்க்க வேண்டும் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம், அதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓசூர் சாலையிலும் நாளை ஒரு வாகனமும் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர். காவிரி கலவரம்... அமைதி காக்க வேண்டும்... வெங்கையா நாயுடு வலியுறுத்தல் தமிழர்களைக் காக்க இரவு பகலாக செயல்படும் கர்நாடக தமிழ்ச் சங்கங்கள் #cauvery நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி மகன் வீடுகளில் 2வது நாளாக வருவமான வரி சோதனை- ஆவணங்கள் சிக்கின Featured Posts அரசு மறைமுக ஆதரவு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டனர். அதேசமயம், அரசு பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்குமா அல்லது விடுமுறையா என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. பந்த்துக்கு அரசு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனவே கர்நாடக அரசு பந்த்தை ஆதரிக்க முடியாது. இருப்பினும் மறைமுகமாக பந்த்துக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. எனவே நாளை அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வராவிட்டாலும் கூட அரசு கண்டு கொள்ளாது என்றே கருதப்படுகிறது. வட கர்நாடகத்தில் ஆதரவு இருக்காது பந்த் முழு அளவில் இருக்கும் என்றாலும் கூட வழக்கம் போல வட கர்நாடகாவில் பந்த் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டனா, ராம்நகர், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் போலீஸ் குவிப்பு பெங்களூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு விதான சவுதா முன்பு அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் கர்நாடக காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

மைசூரில் தமிழ் நடிகர்கள் தங்கியருந்த லலிதா மஹால் பேலஸ் ஹோட்டலில் தாக்குதல்

மைசூரு: மைசூரில் தமிழ் நடிகர், நடிகையர் தங்கியிருந்த ஹோட்டலில் கன்னட போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீஸார் விரைந்துள்ளனர். மைசூரில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஹோட்டலில் ஒரு தமிழ்த் திரைப்படப் படக்குழுவினர் தங்கியிருந்தனர். படப்பிடிப்புக்காக அவர்கள் வந்திருந்தனர். லலிதா பேலஸ் ஹோட்டலில்தான் பல்வேறு தமிழ் நடிகர், நடிகையரும் தங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென அந்த ஹோட்டலை வன்முறைக் கும்பல் முற்றுகையிட்டது. ஹோட்டல் பாதுகாவலர்களை அடித்துத் தள்ளி விட்டு உள்ளே புகுந்த அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்து விட்டதாகவும், நடிகர், நடிகையர் தமிழ்நாட்டுக்குத் திரும்பப் போவதாகும் கூறி ஹோட்டல் நிர்வாகம், வன்முறையாளர்களை சமாதானப்படுத்த முயற்சித்தது. போலீஸாருக்கும் தகவல் போய் அவர்களும் விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தால் மைசூரில் பரபரப்பு ஏற்பட்டது. காவிரிப் பிரச்சினையில் மைசூரு, மண்டியா ஆகிய நகரங்களில் தொடர்ந்து தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சனி, 10 செப்டம்பர், 2016

அமெரிக்க நிறுவனங்களின் திடீர் முடிவால் டிசிஎஸ், இன்போசிஸ்-க்கு ரூ.40,000 கோடி இழப்பு..!

மும்பை: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான 'டிசிஎஸ்' மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் துவங்கி 2 மணிநேரத்தில் 6 சதவீதம் சரிந்து 6 மாத சரிவை அடைந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் சுமார் 40,000 கோடி ரூபாயை இழந்துள்ளது. இந்தப் பெரும் இழப்பில் டிசிஎஸ் நிறுவனத்திற்குத் தான் அதிகளவிலான மதிப்பு..! எல்லாவற்றுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த ஒரே முடிவுதான் காரணமாக அமைந்துள்ளது. என்ன முடிவு..? டிசிஎஸ்1/12 டிசிஎஸ் இந்திய பங்குச்சந்தையில் அதிகச் சந்தை முதலீட்டு கொண்டுள்ள நிறுவனங்களில் டிசிஎஸ் முதலிடம், அதுமட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் 55 சதவீத வருவாய் மற்றும் லாபத்தைத் தனது மென்பொருள் வர்த்தகத்தின் வாயிலான பெறுகிறது. அதாவது டிசிஎஸ் நிறுவனத்தின் வாயிலாகப் பெறுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது.   ஆன்லைனில் அனைத்து வகையான இன்ஸ்யூரன்ஸ் வாங்க/புதுப்பிக்க